• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

பிஎம் கேர்ஸ் நிதி: பல ஆயிரம் கோடி ரூபாய் குவிந்தும் சில லட்சம் மட்டுமே செலவு – தணிக்கை அறிக்கையால் எழும் கேள்விகள் என்ன?

Byadmin

Aug 21, 2026


பிஎம் கேர்ஸ் நிதியின் வெளிப்படைத்தன்மை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிஎம் கேர்ஸ் நிதியின் வெளிப்படைத்தன்மை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன

2020 ஆம் ஆண்டில் வெறும் 2.25 லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியில், 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 8,452 கோடி ரூபாய் குவிந்திருந்தது.

பிஎம் கேர்ஸ் நிதியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஆனால் 8,452 கோடி ரூபாய் கையிருப்பில் இருந்தபோதிலும், 2024-25 ஆம் ஆண்டில் இந்த நிதியிலிருந்து வெறும் 87.85 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை, அரசு பிஎம் கேர்ஸ் நிதியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. ஆனால் அந்த எண்ணிக்கைகள் பல பழைய மற்றும் புதிய கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.

பேரிடர்கள் மற்றும் அவசரநிலைகளின் போது, மக்களுக்கு உதவுவதற்காக இந்த நிதி 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

By admin