• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி அணிகள் இன்று மோதல்

Byadmin

Aug 21, 2026


8 அணிகள் பங்கேற்றுள்ள 10- வது டி.என். பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஒவ்வொரு அணிகளும் 6 போட்டிகளில் விளையாடிவிட்டன.

இன்றும் 2 ஆட்டங்கள்

பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் 4 அணிகள் இன் னும் முடிவாகவில்லை. திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் வாய்ப்பை இழந்தன. 6 அணிகள் போட்டியில் உள்ளன.

இன்றும் 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் – பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக் கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கோவை அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5- வது இடத்தில் உள்ளது. 4-வது வெற்றி யுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது. கோவை அணி யின் ரன்ரேட் நன்றாக உள்ளது. தோற்றால் வெளி யேறிவிடும்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட் டத்தில் என். ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண் டுக்கல் (7 விக்கெட்), சேலம் ( 5 விக்கெட்), மதுரை (39 ரன்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது.

நெல்லை (50 ரன்), திருப்பூர் ( 7 விக்கெட்), கோவை (5 விக்கெட்) ஆகிய வற்றிடம் தோற்றது. திருச்சி அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

நாளையுடன் லீக் முடிகிறது

லீக் ஆட்டங்கள் நாளை யுடன் முடிகிறது. நாளையும் 2 போட்டி நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் – அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடை பெறும் 2- வது போட்டியில் சோனு யாதவ் தலைமை யிலான நெல்லை ராயல் கிங்ஸ் – அணிருத் தலைமை யிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

By admin