• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

பிகாசோவின் இந்த ஓவியம் ‘அருவருப்பானதாக’ அறியப்படுவது ஏன்?

Byadmin

Jun 24, 2026


பிகாசோ, ஓவியங்கள்

பட மூலாதாரம், The Museum of Modern Art, New York/ Aurélien Mole/ Henry Taylor

படக்குறிப்பு, மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட புதிய வடிவம், பிகாசோ வரைந்த உண்மையான வடிவம்

    • எழுதியவர், ப்ரசியஸ் அடெசினா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பாப்லோ பிகாசோவின் சர்ச்சைக்குரிய ‘அவிஞ்ஞான் நகரத்து இளம்பெண்கள்’ ஓவியம் எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டதோ அந்த அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்தது. தற்போதும் அந்த ஓவியம் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.

அந்த ஒவியம் உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கழித்து புகழ்பெற்ற அமெரிக்க ஓவியரான ஹென்ரி டெய்லர் அதனை மீட்டுருவாக்கம் செய்து புதிய வடிவத்தில் உருவாக்கினார். சமீபத்தில் அவரது புதிய வடிவம் பாரிசில் பிகாசோ அருங்காட்சியகத்தில் நடைபெற்ற முக்கியமான ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

1907-ஆம் ஆண்டு, பாப்லோ பிகாசோ தனது நண்பர்களையும் கலைஞர்களையும் பாரிசில் உள்ள தனது ஸ்டூடியோவுக்கு அழைத்திருந்தார். ஆறு மாதங்களாக தான் உருவாக்கி வந்த ஓவியத்தை அவர்களிடம் காட்ட விரும்பினார். அங்கு வந்த அனைவருமே ஒரே மாதிரியான அதிர்ச்சி மற்றும் அருவருப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.

பிரெஞ்சு ஓவியரான ஜார்ஜஸ் ப்ராக் அந்த அனுபவத்தை பெட்ரோல் குடிப்பதுடன் ஒப்பிட்டார். ஹென்றி மேட்டீஸ் அதிலிருந்த பெண்ணை “அருவருப்பானவர்” என்று குறிப்பிட்டார். அதற்குப் பல ஆண்டுகள் கழித்து 1916-இல் தான் அந்த ஓவியம் பொதுவெளிக்கு வந்தது.

நூறு ஆண்டுகள் கழித்தும் பிகாசோவின் மிகவும் அடையாளம் காணக்கூடிய மற்றும் சர்ச்சைக்குரிய ஓவியமாக இது திகழ்கிறது. முந்தைய வடிவம் பற்றி டெய்லர் ஒரு முக்கியமான புள்ளியை வலியுறுத்தி குறிப்பிடுகிறார். பிகாசோ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அந்த ஓவியத்தில் ஆப்ரிக்க கலையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

By admin