23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் டொரண்டோ ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 4.30 மணிக்கு நடைபெற்ற ‘எல்’ பிரிவு லீக் ஆட்டத்தில் பனாமா, குரோசியா அணிகள் மோதின.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 0-0 என இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குரோசியாவின் அந்தே புதிமிர் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின், யாரும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், குரோசியா அணி 1-0 என பனாமா அணியை வென்றது. எல் பிரிவில் குரோசியா அணி புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.