• Tue. Sep 29th, 2026

24×7 Live News

Apdin News

பிரகாசம்: பஞ்சாப்பில் கொத்தடிமையாக இருந்து 23 ஆண்டுகளுக்கு பின் தாயிடம் சேர்ந்த கோவை இளைஞர் மீண்டும் மாயம்

Byadmin

Sep 29, 2026


கோவை, தமிழ்நாடு, பஞ்சாப், தொலைந்து போன மகனைச் சந்தித்த தாய்
படக்குறிப்பு, தாயுடன் பிரகாசம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

”இனிமேல் என்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான். என் மகனைப் பார்ப்பதற்காக எங்களை விட அவனுடைய அக்கா, தங்கைகள் (சுந்தரியின் சகோதரிகளின் மகள்கள்) மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவனை ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என் மகன் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறான். அவனை இனிமேல் நன்றாகப் பார்த்துக்கொள்வதுதான் என்னுடைய ஒரே வேலை.”

கோவையிலிருந்து 23 ஆண்டுகளுக்கு முன்பு, காணாமல் போய் பஞ்சாப் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட கோவை இளைஞரை, பஞ்சாப்பிலிருந்து மீண்டும் அழைத்து வந்த தாயார் சுந்தரி, அப்போது பிபிசியிடம் சொன்ன வார்த்தைகள் இவை.

கடந்த ஜூலை 28 அன்று, தன் மகனை 23 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த சுந்தரி, அவரை கோவைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் வைத்துப் பராமரித்து வந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதியிலிருந்து அவருடைய மகன் பிரகாசம், மீண்டும் காணாமல் போயுள்ளார்.

நீலாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சுந்தரி, தன் மகன் மீண்டும் கிடைத்தால் அவனை மனநலக் காப்பகத்தில் சேர்க்க வேண்டுமென்று பிபிசியிடம் தெரிவித்தார்.

பஞ்சாபிலிருந்து மீட்கப்பட்ட பிரகாசத்துடன் அவரது தாய் சுந்தரி இருக்கும் படம் (கோப்புப் படம் )

படக்குறிப்பு, பஞ்சாபிலிருந்து மீட்கப்பட்ட பிரகாசத்துடன் அவரது தாய் சுந்தரி இருக்கும் படம் (கோப்புப் படம்)

பஞ்சாப்பில் கொத்தடிமையாக கொடுமைப்படுத்தப்பட்ட பிரகாசம்!

தன் வீட்டிலிருந்து பிரகாசம் பிரிந்து சென்றதும் மீண்டும் சேர்ந்ததும் ஆச்சரியமளிக்கும் உண்மைக்கதை.

By admin