• Tue. Sep 29th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா சீனாவுக்கு ஆயுதங்களை விற்காதது ஏன்? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Sep 29, 2026


சமீபத்திய பேச்சுவார்த்தைகளின்போது, ​​ஷி ஜின்பிங்கிடம் ஆயுதங்களை விற்பனை செய்ய டிரம்ப் முன்வந்ததாக சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்ட்யூ தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு, சமீபத்திய பேச்சுவார்த்தைகளின்போது, ​​ஷி ஜின்பிங்கிடம் ஆயுதங்களை விற்பனை செய்ய டிரம்ப் முன்வந்ததாக சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் பெர்ட்யூ தெரிவித்துள்ளார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்ட்யூ, கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து முன்மொழிந்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ்-க்கு அளித்த பேட்டியில் டேவிட் பெர்ட்யூ இதைத் தெரிவித்தார். கடந்த வாரம் அமெரிக்கா வந்திருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் பேசியபோது, உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாகவும், சீனாவுக்கு அமெரிக்காவிடம் இருந்து சில ஆயுதங்களை வாங்குவதில் விருப்பம் உள்ளதா என்று கேட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும், டேவிட் பெர்ட்யூவின் இந்தப் பேட்டிக்குப் பிறகு, சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

சீனாவுக்கு ஆயுத விற்பனை செய்வதை அமெரிக்கச் சட்டம் தடை செய்துள்ளதாகவும், சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஆயுத விற்பனை முன்மொழிவுக்கும் தைவானுக்கும் உள்ள தொடர்பு

தைவான் அதிபர் லாய் சிங்-தே தனது நாட்டு ராணுவ வீரர்களுடன்

படக்குறிப்பு, தைவான் அதிபர் லாய் சிங்-தே தனது நாட்டு ராணுவ வீரர்களுடன்

பெர்ட்யூவின் பேட்டிக்குப் பிறகு, தைவானுக்கான 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. தற்காப்புக்காக தைவானுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா சட்டரீதியாகக் கடமைப்பட்டுள்ளது.

By admin