• Tue. Sep 29th, 2026

24×7 Live News

Apdin News

யாழ். வல்லைப் பகுதியில் விபத்து | பூசகர் பலி

Byadmin

Sep 29, 2026


யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில், வல்லை முனீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (28)  இடம்பெற்ற விபத்தில் பூசகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வல்லை முனீஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பூசகர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார்.

இதன்போது, அவர் மோட்டார் சைக்கிளுடன் வீதியில் விழுந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சமயம் பருத்தித்துறை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந்த பட்டா ரக வாகனம், வீதியில் விழுந்து கிடந்த பூசகர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பட்டா ரக வாகனம் வீதியோர மின்கம்பத்தில் மோதி தடம்புரண்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post யாழ். வல்லைப் பகுதியில் விபத்து | பூசகர் பலி appeared first on Vanakkam London.

By admin