• Wed. May 20th, 2026

24×7 Live News

Apdin News

பிரதமர் மோதியிடம் கேள்வி கேட்க முயன்றது ஏன்? – நார்வே பத்திரிகையாளர் பிபிசிக்கு அளித்த பேட்டி

Byadmin

May 20, 2026


நார்வே பத்திரிகையாளர்

பட மூலாதாரம், @HelleLyngSvends/X

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
    • பதவி, ஆசிரியர், பிபிசி ஹிந்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதி தற்போது ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார். பிரதமர் மோதியின் நார்வே பயணத்தின் போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்த கருத்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

நார்வே பிரதமர் ஜோனாஸ் ஸ்டோருடனான கூட்டறிக்கைக்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஹெலா லாங் பிரதமர் நரேந்திர மோதியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பினார், அதே நேரத்தில் பிரதமர் அங்கிருந்து வெளியேறுவதைக் காண முடிகிறது.

பிபிசி நியூஸ் ஹிந்திக்கு ஹெலா லாங் பேட்டியளித்தார்.

ஒரு பத்திரிகையாளராகக் கேள்வி கேட்பது தனது பணி என்றும், ஒரு சக்திவாய்ந்த நாடு தனது சிறிய நாட்டிற்கு வந்து அவர்களுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் போது, ​​கேள்வி கேட்பது தனது பொறுப்பு என்றும் அப்பேட்டியில் ஹெலா கூறினார்.

நார்வேயின் தலைநகரான ஆஸ்லோவிலிருந்து திங்கள்கிழமை வெளியான ஒரு காணொளியில், பத்திரிகையாளர் ஹெலா லாங் , “பிரதமர் மோதி, உலகின் மிகவும் சுதந்திரமான பத்திரிகையாளர்களிடமிருந்து நீங்கள் ஏன் கேள்விகளை எதிர்கொள்வதில்லை?” என்று கூறுவதைக் கேட்க முடிகிறது.

By admin