• Mon. Jun 1st, 2026

24×7 Live News

Apdin News

பிரபல இங்கிலாந்து pop singer லிபா தனது நீண்ட நாள் காதலன் டர்னரை கரம்பிடித்தார்

Byadmin

Jun 1, 2026


பிரபல பாப் பாடகி துவா லிபா மற்றும் நடிகர் காலெம் டர்னர், தங்களுக்குப் பிரியமானவர்கள் முன்னிலையில், லண்டனில் நடைபெற்ற ஒரு விழாவில் திருமணம் செய்துகொண்டனர். சர்வதேசப் பத்திரிகைகளால் பெறப்பட்ட இந்த நெருக்கமான திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரபல பாப் பாடகி லிபாவும், நடிகர் டர்னரும் தங்கள் உறவை உறுதிப்படுத்தி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இந்தத் திருமண புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அவர்கள் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் தோன்றியிருந்தாலும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விரிவாகப் பேசுவதைத் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில், பத்திரிகைகளில் வெளியான இந்த வைரல் புகைப்படங்களில், தம்பதியினர் தங்களுக்குப் பிரியமான ஒரு சிறிய குழுவினருடன் திருமண இடத்திலிருந்து வெளியேறுவது போன்றும், டேனியல் ரோஸ்பெர்ரி வடிவமைத்த Schiaparelli couture suit உடையை லிபா அணிந்திருந்ததாக Vogue பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதனுடன் பொருந்தும் கிளவுஸ், Christian Louboutin shoes மற்றும் பெரிய அளவிலான Stephen Jones வெள்ளைத் தொப்பி ஆகியவற்றை அவர் அணிந்திருந்தார். இருவரும் கைகோர்த்து நடந்து சென்றனர். டர்னர் நீல நிற சூட் மற்றும் துவா லிபா திருமண கவுன் அணியாமல், skirt suit அணிந்திருந்தார்.

இந்தத் தம்பதியினர் அடுத்த வாரம் 3 நாட்கள் இத்தாலிய பிரம்மாண்டக் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். ஆனால், சிசிலியின் பலேர்மோவில் நடைபெறும் இந்த மாபெரும் கொண்டாட்டங்களுக்கு முன்பு, ஒரு சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

சிசிலியின் மாபெரும் கொண்டாட்டம்

சிசிலி கொண்டாட்டத்திற்காக, இந்தத் தம்பதியினர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த Villa Valguarnera தேர்வு செய்துள்ளனர். Tyrrhenian கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள ஆடம்பரமான Villa Igiea ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

3 நாள் கொண்டாட்டம் வியாழன் முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் என சர்வதேச பத்திரிகையான The daily mail வெளியிட்ட பதிவில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 நாள் கொண்டாட்டத்திற்கான விருந்தினர் பட்டியல்

மூன்று நாள் கொண்டாட்டத்திற்கான விருந்தினர் பட்டியலில் சர் எல்டன் ஜான், மார்க் ரான்சன், சார்லி எக்ஸ்.சி.எக்ஸ், டொனாடெல்லா வெர்சாசே மற்றும் சைமன் போர்ட் ஜாக்வெமஸ் ஆகியோர் உள்ளனர்.

இது மிகவும் அருமையான மற்றும் ஆடம்பரமான திருமண விழாவாக இருக்கப் போகிறது என அவர்களது நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு, ஜூன் 2025ல், பிரிட்டிஷ் Vogue பத்திரிகைக்கு துவா லிபா அளித்த பேட்டியில், தானும் டர்னரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதை லிபா உறுதிப்படுத்தினார். இந்த மைல்கல்லைப் பற்றிப் பேசுகையில், அவர் எங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்று கூறினார்.

அவர் தனது நிச்சயதார்த்த மோதிரத்தைப் பற்றியும் பேசினார், மேலும் டர்னர் தன்னை நன்கு புரிந்துகொண்டார் என்றும், “நான் அதன் மீது மிகுந்த பிரியம் கொண்டிருக்கிறேன். அது அப்படியே என்னைப் போன்றது. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் யாருடன் இருக்கப் போகிறீர்களோ, அந்த நபர் உங்களை நன்கு அறிந்திருக்கிறார் என்பதை அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தில் ஒரு குடும்பத்தை உருவாக்க விரும்புவது குறித்தும், ஒரு நாள் தனக்கு குழந்தைகள் வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறினார். New Rules, Don’t Start Now and Levitating போன்ற வெற்றிப் பாடல்களுக்காக அறியப்பட்ட லிபா, கடைசியாக நவம்பர் 2024-ல் மும்பையின் MMRDA மைதானத்தில் இந்தியாவில் நிகழ்ச்சி நடத்தினார்.

By admin