1
பிரபல இந்திய பொலிவூட் மற்றும் கோலிவூட் நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று புதன்கிழமை (09) மும்பையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
கொழும்பில் நாளை (10) நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் ஹன்சிகா மோத்வானி கலந்துகொள்ளவுள்ளார். இவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவை ஆகும். இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ஹன்சிகா மோத்வானி 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி மும்பையில் பிறந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சில இந்தி சேனல்களில் நடித்துள்ளார்.
ஹன்சிகா மோத்வானி தன்னுடைய 16-வது வயதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் 2011-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த எங்கேயும் காதல். ஆனால் அதே வருடம் தனுஷ் ஜோடியாக நடித்த மாப்பிள்ளை திரைப்படம் திரையில் முதலில் வெளியானது.