• Wed. Jul 9th, 2025

24×7 Live News

Apdin News

பிரான்ஸ், மார்ஷெல் நகரில் பாரிய காட்டுத்தீ; விமான நிலைய சேவைகள் பாதிப்பு!

Byadmin

Jul 9, 2025


பிரான்ஸின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதனால், பிரான்ஸின் 2ஆவது மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ரயில் மற்றும் பஸ் சேவைகளும் முடங்கின. முக்கிய மூதிகள் மற்றும் சுரங்க பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் தீயணைப்பு வீரர்கள் ஆவர்.

பிரான்ஸின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அந்த நகரத்தின் மேயர் பென்வாயிட் பாயன் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுள்ளதுடன், தொடர்ந்து வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

சிகரெட் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன், தீப்பற்ற கூடிய பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

220 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் தெளிக்கும் விமானங்களும் சம்பவ பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 720 தீயணைப்பு வீரர்கள் பணியில் உள்ளனர்.

எனினும், 700 ஹெக்டேர்கள் பரப்பிலான நில பகுதிகள் தீயில் எரிந்து போயுள்ளன. 63 வீடுகள் சேதடைந்துள்ளன. 10 கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காட்டுத்தீ பரவிய இடத்தில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

By admin