• Fri. Sep 11th, 2026

24×7 Live News

Apdin News

பிரிக்ஸ் உச்சி மாநாடு: இந்தியாவுக்கு சவாலாகும் சீனாவின் செல்வாக்கு – மோதியின் இலக்கு என்ன?

Byadmin

Sep 11, 2026


பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீனாவின் செல்வாக்கு, மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன் போர் - இந்தியா முன்னுள்ள சவால்கள்

பட மூலாதாரம், MAURO PIMENTEL/AFP via Getty Images

    • எழுதியவர், அம்ரிதா ஷர்மா
    • பதவி, பிபிசி மானிட்டரிங்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன் மோதல்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தத் தயாராகி வரும் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

நிறுவனர் உறுப்பினர்களான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன், விரிவுபடுத்தப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது எகிப்து, எத்தியோப்பியா, சௌதி அரேபியா, இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் மேலும் 10 கூட்டாளர் நாடுகளும் இணைந்துள்ளன.

இவை அனைத்தும் சேர்ந்து உலக மக்கள்தொகையில் 49 சதவிகிதத்தையும், உலக நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதத்தையும் சர்வதேச வர்த்தகத்தில் 26 சதவிகிதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

“வெவ்வேறு வலிமைகள், ஒரே பொதுவான நோக்கம்” என்பதே இந்த உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ முழக்கம். உறுப்பு நாடுகளின் கூட்டு வலிமையைப் பயன்படுத்தி உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதே இதன் நோக்கம்.

இருப்பினும், 2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா பல சிக்கலான அம்சங்களைக் கையாள வேண்டியிருக்கும். இரான் மற்றும் யுக்ரேன் போர்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள், அமெரிக்க டாலர் சார்பைக் குறைக்கும் முயற்சிகள் போன்ற விவகாரங்களைச் சமாளிப்பதுடன், சீனாவுடனான நலன் சார்ந்த போட்டியையும் இந்தியா நிர்வகிக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில், ‘உலக தெற்கின்’ (Global South) குரலாகத் தன்னை நிலைநிறுத்தும் தனது பரந்த இலக்கையும் முன்னெடுத்துச் செல்ல முயல்கிறது.

By admin