• Sat. Sep 12th, 2026

24×7 Live News

Apdin News

பிரிக்ஸ் புதுடெல்லி பிரகடனம் அமெரிக்கா பற்றி மறைமுகமாக என்ன சொல்கிறது? முழு விவரம்

Byadmin

Sep 12, 2026


பிரிக்ஸ் புதுதில்லி பிரகடனம் ஒருமித்த கருத்துகளுடன் வெளியீடு

பட மூலாதாரம், Narendra Modi Photo Gallery/ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரிக்ஸ் நாடுகள் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கடுமையாகக் கண்டித்துள்ளன. எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த முடியாது என்று அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 பக்கங்களும், 140 அம்சங்களையும் கொண்ட இந்தப் புதுடெல்லி பிரகடனமானது, “கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை”க் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதம், அதற்கு நிதி உதவி அளித்தல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகியவற்றுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளை எடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை பிரிக்ஸ் நாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

பயங்கரவாதத்தை எந்தவொரு மதம், தேசிய இனம், நாகரிகம் அல்லது சமூகக் குழுவுடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்று அந்தப் பிரகடனம் குறிப்பிடுகிறது.

இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் பரவுவதைத் தடுப்பதற்காக ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தின. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்தல், ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல், பணமோசடி, சைபர் குற்றங்கள், ஊழல் மற்றும் டிஜிட்டல் மோசடிகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவை வலியுறுத்தின.

By admin