• Thu. Apr 30th, 2026

24×7 Live News

Apdin News

‘பிரெஞ்சுக்கு பதில் இந்தி?’ – சிபிஎஸ்இ சுற்றறிக்கைக்கு புதுச்சேரியில் எதிர்ப்பு ஏன்?

Byadmin

Apr 30, 2026


சிபிஎஸ்இ, கல்வி, மும்மொழிக் கொள்கை, பிரெஞ்சு மொழி, இந்தி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிபிஎஸ்இ பள்ளிகளில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் குறிப்பிட்டபடி, மூன்று மொழிகளுள் குறைந்தது இரண்டு, இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனையாகும்.

‘ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட சிபிஎஸ்இ பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்திய மொழிகள் அல்லாமல் அவர்கள் கற்பிக்கக்கூடிய ஒரே மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்கும். இதனால், பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற மற்றொரு வெளிநாட்டு மொழிக்கு இதில் இடமில்லாத சூழல் உருவாகியுள்ளதாக’ கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றாலும், புதுச்சேரியில் மட்டும் அதிக எதிர்ப்பு எழ காரணம், புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் உள்ள வரலாற்று மற்றும் கலாசார ரீதியிலான தொடர்பு.

சிபிஎஸ்இ, கல்வி, மும்மொழிக் கொள்கை, பிரெஞ்சு மொழி, இந்தி

பட மூலாதாரம், CBSE

படக்குறிப்பு, சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கை

சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி, சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில், 2026-27 கல்வியாண்டு முதல், 6-ஆம் வகுப்பிலிருந்து அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கட்டாய மூன்றாவது மொழியை (R3) அறிமுகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By admin