• Mon. Oct 26th, 2026

24×7 Live News

Apdin News

பிரேசிலில் 4-வது முறையாக அதிபராகும் லுலா: அமெரிக்காவுக்கு ஏமாற்றமா?

Byadmin

Oct 26, 2026


பிரேசிலின் மூத்த இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கடுமையான போட்டி நிலவிய தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

    • எழுதியவர், மெரினா ரோஸ்ஸி, லியாண்ட்ரோ ப்ரேஸெரஸ், வனேசா புஷ்ஷ்ளூட்டர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிரேசிலின் மூத்த இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கடுமையான போட்டி நிலவிய தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வலதுசாரி போட்டியாளரான ஃபிளாவியோ போல்சனாரோவைத் தோற்கடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அதிபர் தேர்தலில் லுலா வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு, 2003 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரை இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்த அவர், மீண்டும் 2023 ஜனவரியில் அதிபரானார்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் சுற்றுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அவரது பயணம் எளிதாக இருக்கவில்லை.

அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் போல்சனாரோ, லுலாவைத் தோற்கடித்திருந்தார். வெறும் மூன்று வாரங்களில் தேர்தல் முடிவை லுலாவால் மாற்ற முடியும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.

லத்தீன் அமெரிக்காவில் நிலவி வரும் பரந்த அரசியல் போக்கிலிருந்தும் லுலாவின் வெற்றி மாறுபட்டுள்ளது. அப்பகுதியில் வாக்காளர்கள் ஆளும் தலைவர்களுக்கு எதிராக வாக்களித்து, வலதுசாரித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அர்ஜென்டினா, சிலி, கொலம்பியா போன்ற பெரிய நாடுகளில்கூட தற்போது பழமைவாதத் தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளனர்.



By admin