• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

பிஹார் மாநிலத்தில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மோசடி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு | Deregistration of 66 lakh voters in Bihar a fraud: P Chidambaram

Byadmin

Jul 27, 2025


திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரசு மருத்​து​வ​மனை​யில் எம்​.பி. தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து ரூ.63 லட்​சத்​தில் டயாலிசிஸ் மையம் அமைக்​கப்​படு​கிறது.

இதற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் கே.ஆர்​.பெரியகருப்​பன், கார்த்தி சிதம்​பரம் எம்​.பி. மாங்​குடி எம்​எல்ஏ உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பின்​னர், சிங்​கம்​புணரி அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.65 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட டயாலிசிஸ் மையத்தை ப.சிதம்​பரம் திறந்து வைத்​தார்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மகா​ராஷ்டிர மாநிலத்​தில் போலி வாக்​காளர்​களை சேர்த்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. பிஹாரில் போலி வாக்​காளர்​களை சேர்க்க முடி​யாமல் போன​தால், அதற்​குப் பதிலாக வாக்​காளர்​களை நீக்​கி​யுள்​ளனர். சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு 2 மாதங்​களுக்கு முன்பு வாக்​காளர் பட்​டியலை திருத்​தி​யது தவறு. 66 லட்​சம் வாக்​காளர்​களை நீக்​கியது மிகப்​பெரிய மோசடி. அந்த மாநிலநிரந்தர குடி​யுரிமை​யுள்ள பலர் வெவ்​வேறு மாநிலங்​களில் பணி செய்​கின்​றனர். அவர்​கள் தேர்​தலுக்கு வாக்​களிக்க பிஹாருக்கு செல்ல மாட்​டார்​களா?

மக்​களவை தேர்​தல் முடிந்த 12 மாதங்​களுக்​குள் 22 லட்​சம் பேர் இறந்​து​விட்​டார்​களா? போலி வாக்​குப் பதிவை தடுக்க வேறு வழிகள் உள்​ளன. தேர்​தல் ஆணை​யம் புல்​டோசர் வைத்​து, வாக்​காளர் பட்​டியலை மாற்​றம் செய்​கிறது. அதற்​குத் தான் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.



any_content_bottom">

By admin