• Thu. Nov 5th, 2026

24×7 Live News

Apdin News

பீட்சாவில் அன்னாசி பழம் சேர்க்க மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட இத்தாலி சமையல் கலைஞர்

Byadmin

Nov 5, 2026


பீட்சாவில் அன்னாசி பழம் சேர்ப்பது தனது கலாசாரத்தை அவமதிப்பதாகக் கூறிய இத்தாலிய சமையல் கலைஞர், குயின்ஸ்லாந்தில் உள்ள உணவகத்தில் அதனைச் சேர்க்க மறுத்திருந்தார்.

படக்குறிப்பு, பீட்சாவில் அன்னாசி பழம் சேர்ப்பது தனது கலாசாரத்தை அவமதிப்பதாகக் கூறிய இத்தாலிய சமையல் கலைஞர், குயின்ஸ்லாந்தில் உள்ள உணவகத்தில் அதனைச் சேர்க்க மறுத்திருந்தார்.

    • எழுதியவர், சைமன் அட்கின்சன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய இத்தாலிய சமையல் கலைஞர் ஒருவர், பீட்சாவில் அன்னாசி பழம் சேர்க்க மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். அது தனது கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் கூறியிருந்தார்.

டேவிட் தம்புரெல்லா, தற்போது மூடப்பட்டுள்ள லா கோஸ்டா உணவகத்தில் இருந்து கடந்த மே மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டார். நிர்வாகத்தினருடன் நடந்த சந்திப்புக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சமையல் கலைஞரின் நடத்தை குறித்து நிர்வாகத்திடம் பல புகார்கள் இருந்தன.

அவற்றில், ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களுக்காக ஹாம் (பன்றிக்கறி) மற்றும் அன்னாசி பழம் சேர்த்த பீட்சாவைத் தயாரிக்க தம்புரெல்லா மறுத்ததும் ஒன்றாகும்.

அப்போது, நிர்வாகத்தின் எந்தவொரு அறிவுறுத்தலும் தனது கலாசாரத்தை அவமதிப்பதாக இருந்தால், அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

தன்னை நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்ததாகக் கூறி, அந்தச் சமையல் கலைஞர் ஆஸ்திரேலியாவின் ஃபேர் வொர்க் கமிஷனில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.



By admin