• Mon. Jul 21st, 2025

24×7 Live News

Apdin News

புகலிடம் கோருவோர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே போராட்டம்; 6 பேர் கைது!

Byadmin

Jul 21, 2025


இங்கிலாந்து தென்கிழக்கு எசெக்ஸில் புகலிடம் கோருவோர் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு ஹோட்டலுக்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

Epping நகரின் The Bell Hotel இருந்த இடத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த போராட்டத்தின் போது, பொலிஸ் வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்தை “மனசாட்சியற்ற குண்டர் செயலை” என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம் Epping நகரத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், குற்றங்கள் அல்லது சமூக விரோத நடத்தைகளைத் தடுக்க அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, போராட்டக்காரர்கள்”அவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்” மற்றும் “எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்” என்று கோஷமிட்டனர்.

ஹோட்டலின் நுழைவாயிலைத் தடுத்த பொலிஸாரின் வாகனங்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். அவர்களில் பெரும்பாலானோர் முடிமூடி அணிந்திருந்தனர்.

இதில் எட்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

The Bell Hotel

The Bell Hotel

The post புகலிடம் கோருவோர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே போராட்டம்; 6 பேர் கைது! appeared first on Vanakkam London.

By admin