1
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது.
பான் இந்திய இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிருத் இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்த தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதியன்று சென்னையின் புறநகர் பகுதியில் #Hukum எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கட் விற்பனை நேற்று தொடங்கியது. தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையானது.
இசையமைப்பாளின் இசை நிகழ்ச்சி ஒன்றின் டிக்கட் – இவ்வளவு குறைவான நேரத்தில், அதிவேகமாக விற்பனையாகி புதிய சாதனை படைத்திருப்பது இதுதான் முதன்முறை என திரையிசை ஆர்வலர்கள் கொண்டாடுகிறார்கள்.