• Wed. Jul 2nd, 2025

24×7 Live News

Apdin News

புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?

Byadmin

Jul 2, 2025


காணொளிக் குறிப்பு, புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?

புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி?

திபெத்திய பௌத்த மதத்தில் தலாய் லாமா மிக உயர்ந்த ஆன்மீக தலைவர். ஜூலை 6ம் தேதி தற்போதைய தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுவார்.

தன்னுடைய பிறந்த நாளுக்கு முன்னதாக, அடுத்த வாரிசு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை சீனா உட்பட முழு உலகமும் உற்று கவனித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த தலாய்லாமாவை தாங்கள் தேர்ந்தெடுக்க உள்ளதாக சீனா கூறியுள்ளது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதாம் ஆண்டு சீனாவுக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியடைந்ததற்கு பின்பு, திபெத்தை விட்டு தற்போதைய தலாய் லாமா வெளியேறினார். அவரை பிரிவினைவாதி என்று சீனா கூறுகிறது. அடுத்த தலாய்மாவை தேர்வு செய்யும் நடைமுறைகள் குறித்து பிபிசி செய்தியாளர் ராகவேந்திரா ராவ் வழங்கும் தகவல்களை பார்க்கலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin