• Wed. Aug 12th, 2026

24×7 Live News

Apdin News

புலி சுறா: கடலின் குப்பைத் தொட்டியான இது செய்யும் ஒரு நன்மை என்ன?

Byadmin

Aug 12, 2026


புலி சுறா

பட மூலாதாரம், Hannes Klostermann/ Ocean Image Bank

    • எழுதியவர், கேத்தரீன் லேதம்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மான் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வரை, புலி சுறாக்கள் (Tiger sharks) உணவைத் தேர்ந்தெடுப்பதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவை. ஒரு நல்ல விருந்து கிடைக்கும் என்றால் அவை சூறாவளியையும் பொருட்படுத்தாமல் களமிறங்கும். அதிர்ஷ்டவசமாக, இவற்றின் இந்த அசாத்தியமான உணவுப் பழக்கம் கடல்வாழ் உயிரினங்களுக்கும் நன்மைகளைச் செய்கிறது.

ஒரு சிறிய பேருந்தின் அளவும், டார்பிடோ ஏவுகணை போன்ற நெறிப்படுத்தப்பட்ட உடலமைப்பும், அதிக வலிமைமிக்க தாடை ஆற்றலும் கொண்ட புலி சுறாக்கள், உலகின் மிகப்பெரிய வேட்டைச் சுறாக்களில் ஒன்றாகும்.

கடல்சார் பல்லுயிர் கண்காணிப்பு வலையமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் நீல் ஹேமர்ஷ்லாக், “இவை கடலின் ‘டேங்கர்கள்’ (Tanks)” என்று கூறுகிறார். மேலும், அனைத்து சுறா இனங்களையும் விட இவை மிகவும் பரந்த அளவிலான உணவை உட்கொள்வதால், “கடலின் குப்பைத் தொட்டிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

இவை மெல்லுடலிகள், ஸ்டிங்ரே மீன்கள், கடல் பாம்புகள், சீல் உயிரினங்கள், கணவாய்கள் மற்றும் திமிங்கலங்களை விரும்பிச் சாப்பிடுகின்றன. கடல் பறவைகள் மற்றும் நில வாழ் விலங்குகளையும் இவை விட்டுவைப்பதில்லை.

பெருச்சாளிகள், மான்கள், நாய்கள், ஆடுகள் மற்றும் பூனைகள் கூட இவற்றின் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மிகவும் கூர்மையான முட்களைக் கொண்ட ‘எக்கிட்னா’ (echidna) என்ற உயிரினத்தை ஒரு சுறா வாந்தி எடுத்தது. ஒருவேளை அதன் முட்கள் சுறாவின் தொண்டையை உறுத்தியிருக்கலாம்.

By admin