• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

பெக்டஸ் எக்ஸ்கவேட்டம்: ‘எனது சட்டைக்குள் மறைந்துள்ள குறைபாட்டுடன் வாழ்வது நரக வேதனையாக இருந்தது’

Byadmin

Nov 22, 2026


தனது உடல்நலக்குறைவு சில சமயங்களில் தனது வாழ்க்கையை நரகமாக மாற்றியிருப்பதாக சார்லி கூறுகிறார்.
படக்குறிப்பு, தனது உடல்நலக்குறைவு சில சமயங்களில் தனது வாழ்க்கையை நரகமாக மாற்றியிருப்பதாக சார்லி கூறுகிறார்.

பதின்ம வயதில் இருந்தபோது, பள்ளிக்குச் செல்வதற்காகச் சீருடை அணிவதே சார்லி கிளார்க்கிற்குக் கடினமான ஒன்றாக இருந்தது.

தனது உடல் குறைபாட்டால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை காரணமாக, சக மாணவர்களிடமிருந்து அவர் மறைந்துகொள்ள வேண்டியிருந்தது.

வீட்டில்கூட தனது உடலமைப்பு மற்றவர்களுக்குத் தெரியாதபடி, மேலங்கியை மார்பைச் சுற்றி இறுக்கமாக அணிந்துகொள்வார். ஒரு கட்டத்தில், தனது பிரச்னையைப் பெற்றோரிடம்கூட அவர் தெரிவிக்கவில்லை.

தற்போது 26 வயதாகும் சார்லி, பிறவியிலேயே ஏற்படும் மார்புக்கூட்டின் வடிவக் குறைபாடான ‘பெக்டஸ் எக்ஸ்கவேட்டம்’ என்ற பாதிப்புடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

இந்தக் குறைபாட்டால் மார்புப் பகுதி உள்நோக்கி வளைந்து, பள்ளமாகக் காட்சியளிக்கும்.

By admin