• Sun. Nov 22nd, 2026

24×7 Live News

Apdin News

மல மாற்று சிகிச்சையில் நீங்கள் ஒரு ‘சூப்பர் பூப்பர்’ ஆக எது வேண்டும்? 4 முக்கிய அம்சங்கள்

Byadmin

Nov 22, 2026


சி. டிஃபிசைல் தொற்று, சிகிச்சை, மலம், மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சை, ஆரோக்கியம், குடல் நுண்ணுயிரிகள்

மல மாற்று சிகிச்சையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தச் சிகிச்சைக்காகத் தானம் செய்யத் தகுதியான மலத்தை உற்பத்தி செய்பவர்கள் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இவர்களில் மிகச் சிலர்தான் ‘சூப்பர் பூப்பர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மிகச் சிறந்த மலத்தைக் கண்டறிவது எப்படி? இதற்குப் பின்னால் இருப்பது சுவாரசியமான அறிவியல் தேடல்.

2013-ஆம் ஆண்டு, ஆடம் ஃபே ஒரு வித்தியாசமான விசயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். அதாவது, எந்த வகையான உணவு மிக உயர் தரமான மலத்தை உருவாக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி.

அப்போது அவர் மருத்துவப் படிப்பின் நான்காம் ஆண்டில் இருந்தார். கடுமையான குடல் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் எதிர்க்கும் தன்மை கொண்ட ‘கிளாஸ்ட்ரிடியாய்ட்ஸ் டிஃபிசில்’ என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து அவர் கற்றுக்கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில், வயதான நோயாளி ஒருவர் மீண்டும் மீண்டும் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மல மாற்று சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.

இந்தச் சிகிச்சை முறையில், ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து பெறப்படும் மலமானது நோயாளியின் பெருங்குடலுக்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் நோயாளியின் குடலில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை தீங்கு விளைவிக்கும் சி. டிஃபிசில் பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, குடலில் மீண்டும் நுண்ணுயிரிச் சமநிலையை ஏற்படுத்தும் என்பது இதன் அடிப்படை நோக்கம்.

By admin