பாஜக குடும்பம்
கட்சிக்குள் தனக்குப் பொறுப்பு வழங்கியதற்காக பாஜக மேலிடத்திற்கு யுவேந்திர சாஹல் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாஹல், “பாஜக குடும்பத்திற்குள் எனக்கு ஓர் இடத்தையும் மரியாதையையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசியத் தலைவர் அமர்பால் மௌரியா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.