தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விமல்- கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘நவோரியா’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நவோரியா திரைப்படத்தில் விமல், ஆன் ஷீத்தல். ஆரி அர்ஜுனன். தம்பி ராமையா, பால சரவணன், மீனாட்சி, வடிவுக்கரசி நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், அப்புகுட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கொமடி வித் ஃபேண்டஸி ஜேனரிலான இந்த திரைப்படத்தை டி பி சி ட்ரீம் ஹவுஸ் – சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் திருக்குமரன் கதிர்வேல்- தேவசேனா கதிர்வேல்- சி. ராஜா- சி. கலைவாணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள்- ரசிகர்கள் விரும்பும் கொமர்சல் அம்சங்களுடன் இருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
The post விமல் நடிக்கும் ‘நவோரியா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு! appeared first on Vanakkam London.