ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.
இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த அல்காரஸ், அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (7-1) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவ், ரஷியாவின் மெத்வதேவ் நாளை அதிகாலை மோதுகின்றனர்.