• Sun. Apr 26th, 2026

24×7 Live News

Apdin News

பெங்களூருவில் காதலனை வீட்டுக்கு அழைத்து கொன்றதாக பெண் மீது குற்றச்சாட்டு – என்ன நடந்தது?

Byadmin

Apr 26, 2026


பிடிஎஸ்எம், கர்நாடகா, பெங்களூரு, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனநல நிபுணர்கள் பிடிஎஸ்எம் பாதுகாப்பற்றது மற்றும் இயல்புக்கு மாறானது என கருதுகின்றனர் (மாதிரிப் படம்).

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு பெண் தனது காதலனை ‘ஆசை வார்த்தைகள்’ கூறி வீட்டிற்கு வரவழைத்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, பிரேமா மற்றும் கிரண் ஆகிய இருவரும் ஒரு மொபைல் சேவை நிறுவனத்தில் ஒன்றாகப் பணியாற்றினர். அப்போது அவர்கள் நண்பர்களாகி, சுமார் ஒரு வருடமாக உறவில் இருந்துள்ளனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர்களது உறவில் கசப்பு ஏற்பட்டது.

பெங்களூரு (வடமேற்கு) துணை போலீஸ் கமிஷனர் நாகேஷ் டி.எல், பிபிசி இந்தியிடம் பேசுகையில், “கிரண் தன்னைத் தவிர்ப்பதாக பிரேமா உணர்ந்தார். விரிவான விசாரணைக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்.

‘திட்டமிட்ட கொலை’

காவல்துறையின் கூற்றுப்படி, ​​பயதரஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சன் நகரில் உள்ள தனது வீட்டிற்கு பிரேமா கிரணை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பிரேமாவின் தாயும் சகோதரரும் வேலைக்குச் சென்றிருந்தனர்.

By admin