• Sat. Aug 29th, 2026

24×7 Live News

Apdin News

பெண்கள் கெட்ட வார்த்தை பேசுவது மோசமானதா? இந்தியாவில் பூதாகரமாக எழும் கேள்வி

Byadmin

Aug 29, 2026


பெண்கள் கெட்ட வார்த்தை பேசினால் அது இன்னும் மோசமானதா?

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, கோப்புப் படம்

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பெண்கள் விவகார ஆசிரியர், தில்லி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

டெல்லியில் ஒரு போராட்டத்தின் போது இளம் பெண்கள் கெட்ட வார்த்தை பேசிய காட்சிகள் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஒரு வித்தியாசமான விவாதம் உருவாகியுள்ளது: கெட்ட வார்த்தைகள் பெண்களின் வாயிலிருந்து வந்தால் அவை இன்னும் மோசமானவையா?

இந்த விவாதத்தில் சமீபத்தில் கருத்து தெரிவித்தவர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இளம் பெண்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்ப்பது தனக்கு ஒரு “கலாசார அதிர்ச்சி” என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியதை அவர் விமர்சித்தார்.

“ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் எந்தப் பிரச்னையும் இல்லை; அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண் கெட்ட வார்த்தை பேசினால் அது கலாசார அதிர்ச்சியாகிறது,” என்று ராகுல் காந்தி கூறினார்.

போராட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். அவர்களது சில கடுமையான வார்த்தைகள் பிரதமரை நோக்கியும் இருந்தன. இதனால் பிரதமரின் ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மோதியின் அரசியலை விமர்சிப்பவர்களில் பலர்கூட, பெண்கள் எல்லை தாண்டிவிட்டதாகக் கூறினர்.

போராட்டங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்துவிட்டன. ஆனால் ராகுல் காந்தியின் கருத்துகள், பெண்களின் அரசியல் செயல்பாடு, பெண்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் — அது தீவிரமாக இருந்தாலும், கெட்ட வார்த்தைகளுடன் இருந்தாலும் — இந்தியாவில் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

By admin