• Sun. Jul 13th, 2025

24×7 Live News

Apdin News

பெனிகோ: 3500 ஆண்டு பழைய நகரம் பசிபிக், ஆண்டிஸ், அமேசானை இணைத்தது எப்படி

Byadmin

Jul 12, 2025


பெருவின் பெனிகோ மாகாணத்தில் உள்ள பழங்கால பெனிகோ நகரத்தின் எச்சங்கள்.

பட மூலாதாரம், Reuters

வடக்கு பெருவில் இருக்கும் பரான்கா பிராந்தியத்தில் ஒரு பழமையான நகரத்தை கண்டுபிடித்திருப்பதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

பெனிகோ என்று அழைக்கப்படும் இந்த 3,500 ஆண்டு பழமையான நகரம், ஆரம்பகாலகட்ட பசிபிக் கடற்கரை சமூகங்களை, ஆண்டிஸ் மலைகள் மற்றும் அமேசான் படுகையில் இருந்த சமூகங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய வணிக மையமாக இருந்ததாக நம்பப்படுகிறது.

லிமாவிற்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் உள்ளது.

அண்மைய கிழக்கு உலகு மற்றும் ஆசியாவில் முதல் நாகரிகங்கள் உருவான 1800 கிபி மற்றும் 1500 கிமு-க்கு இடைபட்ட அதே காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

By admin