• Wed. Aug 12th, 2026

24×7 Live News

Apdin News

பெரிய தொடைகள் இருப்பது நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ உதவுமா? சில டிப்ஸ்

Byadmin

Aug 12, 2026


பெரிய தொடைகள் நீண்ட காலம் வாழ்வதுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரிய தொடைகள் நீண்ட காலம் வாழ்வதுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது. இதற்கு தொடையின் தனித்துவமான அமைப்பே முக்கியக் காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • எழுதியவர், கேட் போவி
    • பதவி, குளோபல் ஹெல்த், பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“அவை இவ்வளவு பெரியதாக இல்லாமல் இருந்திருக்கலாம் “

பிரிட்டனைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை டாஷா தாம்சன் தனது தொடைகளைக் குறித்து யோசிக்கும்போதெல்லாம் அவருக்குள் எழுந்த எண்ணம் இதுதான்.

சில கலாசாரங்களில், அழகுக்கான அளவுகோல்களைப் பொறுத்தவரை ஒல்லியான கால்களே நீண்டகாலமாகச் சிறந்தவை எனக் கருதப்படுகின்றன.

“அந்த எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்யாவிட்டால், ஒருவிதமான தோல்வியடைந்தது போன்ற உணர்வு உங்களுக்கு வரக்கூடும்,” என்று பிபிசி உலக சேவையிடம் கூறுகிறார் டாஷா தாம்சன்.

ஆனால், பெருகிவரும் ஆய்வு ஆதாரங்கள், பெரிய தொடைகள் குறித்து தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், மாறாக அவை நீண்ட ஆயுளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன.

By admin