பேபிடால் ஆர்ச்சி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு கூகிள் தேடலில் பிரபலமடைந்து எண்ணற்ற மீம்ஸ்கள் மற்றும் ரசிகர் பக்கங்களை உருவாக்கியது. ஆனால், ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்திய அந்தப் பெயருக்கு பின்னால் உண்மையான பெண் யாரும் இல்லை. அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு போலியானது, இருப்பினும் அது பயன்படுத்திய முகம் ஒரு உண்மையான பெண்ணின் முகம் போல இருந்தது.
'பேபிடால் ஆர்ச்சி': பாலியல் உள்ளடக்கத்துக்காக திருடப்பட்ட இந்திய பெண்ணின் முகம் – என்ன நடந்தது?
