• Wed. Sep 25th, 2024

24×7 Live News

Apdin News

போக்சோ சட்டம்: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?

Byadmin

Sep 25, 2024


சிறார் ஆபாசப் பட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், போக்சோ

பட மூலாதாரம், Getty Images

“ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதே குற்றம்,” கடந்த ஜனவரி மாதம் ‘குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக’ சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறிய கருத்து இது.

மேலும், அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ‘Just Rights for Children Alliance’ என்ற தன்னார்வ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இதை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பார்ப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,” என்று நேற்று (செப்டம்பர் 23) தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் பின்னணி என்ன? குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்கள் பார்ப்பது குறித்து சட்டம் கூறுவது என்ன?

By admin