• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

போட்டோகிராபர்- ‌ திரைப்பட விமர்சனம் – Vanakkam London

Byadmin

Aug 8, 2026


போட்டோகிராபர்- ‌ திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஏ பி எஸ் என்டர்டெயின்மென்ட்

நடிகர்கள் : அஷ்ரஃப், ‘ஆடுகளம்’ நரேன், ஜனனி சமாதானம், தேவி மகேஷ், கருணாகரன் மற்றும் பலர்.

இயக்கம் : அஷ்ரஃப்

மதிப்பீடு : 2/5

படத்தைப் பற்றி வெளியீட்டிற்கு முன் பார்வையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் எந்த வகையினதான உளவியல் உந்துதலும் வழங்காமல்… வெளியாகி இருக்கும் ‘போட்டோகிராபர்: எனும் ஹாரர் திரில்லரான திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தொழிலதிபர் செங்குட்டுவன்( ஆடுகளம் நரேன்- ஆதினி ( தேவி மகேஷ்) தம்பதியர்களின் ஒரே மகன் வீரா( அஷ்ரஃப்) . அவர் தந்தை நடத்தி வரும் தனியார் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ள அவருடைய தந்தை தொடர்ந்து வற்புறுத்துகிறார். ஆனால் அதை ஏற்க மறுத்து ஆறு மாதம் எமக்கான வாழ்க்கையை வாழ போகிறேன் என்று சொல்லிவிட்டு தனது நண்பர் கபிலனின் ( கருணாகரன்) ஆலோசனையின் படி மதி கெட்டான் சோலை எனும் அடர்ந்த வனப் பகுதியில் இருக்கும் பிரத்யேக தங்க மரத்தை எப்படியேனும் புகைப்படம் எடுத்து விட வேண்டும் என கனவு காண்கிறார் வீரா. இதற்காக ஒரு கட்டத்தில் அந்த வனப்பகுதியில் தன்னந்தனியாக சாகச பயணத்தை மேற்கொள்கிறார். அதன் போது அவர் எதிர்கொண்ட வாழ்வியல் அனுபவங்கள் என்ன? அவருடைய கனவை அவர் பூர்த்தி செய்தாரா? இல்லையா? என்ன நடந்தது? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

முதல் பாதியில் இல்லாத பரபரப்பும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் குறைவான அளவிலேனும் இருப்பது சற்று ஆறுதல். அதிலும் அடர்ந்த வனத்தில் பெரும்பாலான திரைக்கதை நகர்த்தப்பட வேண்டும் என்ற கட்டாய சூழல் ஏற்படுவதால் ரசிகர்களுக்கு சோர்வு தான் மிஞ்சுகிறது.

இருப்பினும் சைக்கலாஜிக்கல் – சஸ்பென்ஸ் – மிதலாஜிக்கல்-  ஹாரர் – திரில்லர்-  என பல அம்சங்கள் கலவையாக இடம்பெறுவதால் கொஞ்சம் ரசிக்க முடிகிறது. அதிலும் ஹீரோவின் சாகச பயணத்தின் பின்னணியில் அம்மா சென்டிமென்ட்டை இணைத்திருப்பது புத்திசாலித்தனம்.‌

வீராவாக ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருக்கும் நடிகர் அஷ்ரஃப் ‘ஹீரோ மெட்டீரியல்’ இல்லை என்றாலும்.. கதையின் நாயகனாக வலம் வரலாம்.

கருணாகரன் – ‘ஆடுகளம்’ நரேன் – ஆகியோரை விட குறைவான காட்சியில் திரையில் தோன்றினாலும் ஆதினி கதாபாத்திரத்தில் வீராவின் தாயாக நடித்த நடிகை தேவி மகேஷ்-  மனதில் நிற்கிறார்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு படைப்பு அனுபவத்தை வழங்குகிறது.

ஃபோட்டோகிராபர் –  பற்றரி இல்லா கமெரா.

By admin