• Tue. Jul 15th, 2025

24×7 Live News

Apdin News

போயிங் ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு!

Byadmin

Jul 15, 2025


ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக முதல் கட்ட அறிக்கை வெளியாகி பின், போயிங் ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

விமானங்களில் என்ஜின்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சுவிட்ச்களை ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் பின்வாங்கியது

இதேவேளை, போயிங் விமானங்களில் எரிபொருளை இயந்திரத்துக்கு அனுப்பும் சுவிட்ச் பாதுகாப்பாக உள்ளது என்று அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் போயிங் நிறுவனமும் தெரிவித்துள்ளன.

சுவிட்ச்களின் கட்டுப்பாட்டு அம்சத்தைச் சரிபார்க்கவேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் நிராகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் 12ஆம் திகதி இந்தியாவின் அகமதாபாத் நகரில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விபத்தின் முதற்கட்ட அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கோ தொடங்குவதற்கோ விமானி கட்டுப்பாட்டு சுவிட்ச்யை இழுக்கவேண்டும்.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் புறப்பட்ட சில நொடிகளில் இரு சுவிட்ச்களும் ‘CUTOFF’க்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஒரு விமானி சுவிட்ச்யை ஏன் நகர்த்தினாய் என்று கேட்பதும், அதற்கு மற்றொரு விமானி தான் அப்படிச் செய்யவில்லை என்று சொல்வதும் குரல் பதிவில் கேட்கிறது.

விபத்துக்குப்பின் பார்த்தபோது, விமானத்தில் அவை “RUN” என்ற நிலையிலேயே இருந்தன. விமானிகள் அதை மாற்ற முயற்சி செய்திருக்கின்றனர் என்பதை அது காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி : எரிபொருள் துண்டிக்கப்பட்டதே ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம்!

2018ஆம் ஆண்டு அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விமானிகள் சுவிட்ச்களைத் தவறுதலாக நகர்த்திவிடாமல் இருக்க, அவற்றைச் சோதிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாய் ஏர் இந்தியாவின் அறிக்கை சொல்கிறது.

விமான விபத்து எரிபொருள் விநியோக சுவிட்ச் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

By admin