• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

ப்ரிக்ஸ் கூட்டமைப்பு: துருக்கி இணைந்தால் என்ன நடக்கும்? மேற்கத்திய எதிர்ப்பு குறையுமா?

Byadmin

Sep 19, 2024


துருக்கி அதிபரான  ரிசெப் தையிப் எர்டோகன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருக்கி அதிபரான ரிசெப் தையிப் எர்டோகன்

“ப்ரிக்ஸ் கூட்டமைப்பு உட்பட அனைத்து முக்கிய அமைப்புகளிலும் துருக்கி உறுப்பினராக விரும்புவதாக எங்கள் அதிபர் தெளிவாகக் கூறியுள்ளார்,” என்று துருக்கி அதிபரான ரிசெப் தையிப் எர்டோகனின் ஆளும் கட்சி செய்தித் தொடர்பாளர் ஓமர் செலிக் கூறினார்.

ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் சேர துருக்கி முறைப்படி விண்ணப்பித்துள்ளதா என்பது குறித்து அவர் தெளிவாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்காக ‘தொடர்ச்சியாக முயற்சி’ எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அக்டோபர் 22 – 24ஆம் தேதிகளில் மேற்கு ரஷ்யாவில் உள்ள கசான் நகரத்தில் நடைபெறவுள்ள ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் துருக்கி இணைந்தால் என்ன நடக்கும்?

ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் சேர துருக்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், மேற்கத்திய நாடுகள் அல்லாத ரஷ்யா மற்றும் சீனா தலைமையில் உள்ள பொருளாதாரக் கூட்டணியில் உறுப்பினராகும் முதல் நேட்டோ உறுப்பு நாடு என்ற பெருமையை துருக்கி பெரும்.

By admin