• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிரா: மசூதிக்குள் விநாயகர் சிலை வந்தது எப்படி? 40 ஆண்டு இந்து – முஸ்லிம் சகோதரத்துவத்தின் கதை

Byadmin

Sep 16, 2024


இந்து - முஸ்லிம் சகோதரத்துவம், மகாராஷ்டிரா

பட மூலாதாரம், Sarfaraj Sanadi/Yogesh Jiwaje

படக்குறிப்பு, கோட்கிண்டியின் மசூதியில் (இடது) கணபதி சிலை வைக்கப்பட்டுள்ளது. குருந்த்வாட், தேபன்பூர் மசூதியில் விநாயகர் சிலை (வலது).

விநாயகர் சதுர்த்தியின் போது மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான நிகழ்வு நடப்பது வழக்கம். இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி போன்ற கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியின் போது மசூதியில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும். இந்த தனித்துவமான பாரம்பரியம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது.

சாங்லி என்னும் பகுதியில் உள்ள வால்வா தாலுகாவில் இருக்கும் ஒரு கிராமம் தான் கோட்கிண்டி. இங்குள்ள ஜுஜார் சவுக்கில் உள்ள மசூதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலை பத்து நாட்களுக்கு நிறுவப்படும். 44வது முறையாக இந்த ஆண்டும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இங்கு வைக்கப்படும் கணபதியை தரிசனம் செய்ய இந்துக்களும், இஸ்லாமியர்களும் அதிக அளவில் வருகின்றனர்.

மசூதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகரின் கதை 1961-இல் இருந்து தொடங்குகிறது.

By admin