• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

மகாராஷ்டிர அரசின் புதிய சட்டத்தால் தேவாலயங்களில் அச்சம் ஏன்? ஓர் அலசல்

Byadmin

Oct 3, 2026

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சில தேவாலயங்கள், வழிபாட்டுக்கு வருபவர்களிடம், “நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இங்கு பிரார்த்தனை செய்ய வந்தேன்” என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்குமாறு கேட்கத் தொடங்கியுள்ளன.

படக்குறிப்பு, மகாராஷ்டிராவில் கொண்டுவரப்பட்ட புதிய மதமாற்றத் தடைச் சட்டம் கிறிஸ்தவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • எழுதியவர், ஜான்ஹவி மூலே
    • பதவி, பிபிசி மராத்தி

    • எழுதியவர், ஜோயா மதீன்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சில தேவாலயங்கள், வழிபாட்டுக்கு வருபவர்களிடம், “நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இங்கு பிரார்த்தனை செய்ய வந்தேன்” என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்குமாறு கேட்கத் தொடங்கியுள்ளன.

அங்கு வருபவர்கள் தங்களது பெயரை எழுதுவதுடன், சில நேரங்களில் அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிடுகின்றனர். தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை அல்லது ஆசைகாட்டி தேவாலயத்துக்கு அழைக்கவில்லை என்பதையும் கையெழுத்திட்டு உறுதி செய்கின்றனர்.

பிபிசி பார்த்த இந்தப் படிவங்களுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் எதுவும் இல்லை.

ஏதேனும் பிரார்த்தனைக் கூட்டம் தொடர்பாக புகார் எழுப்பப்பட்டு, அதில் பங்கேற்றவர்களை மதமாற்றம் செய்ய ஏற்பாட்டாளர்கள் முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தால், அதற்காக தேவாலயங்கள் இந்தப் படிவங்களை வைத்திருக்கின்றன.

மும்பையைத் தலைநகராகக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், மதமாற்றத்துக்கு எதிரான புதிய சட்டம் அமலுக்கு வருவதற்கு சற்று முன்பு, ஆகஸ்ட் மாத இறுதியில் சில தேவாலயங்களில் இந்த நடைமுறை தொடங்கியது.

By admin