• Sat. Sep 28th, 2024

24×7 Live News

Apdin News

மக்கானா: வட இந்தியாவில் அதிகரிக்கும் தாமரை விதை விவசாயம் – லாபம் தரும் தொழில்தானா?

Byadmin

Sep 28, 2024


மக்கானா: வட இந்தியா முழுக்கப் பயிரிடப்படும் இந்த உணவில் அப்படி என்ன மகிமை?

பட மூலாதாரம், Getty Images

பூல் தேவ் ஷானி, அவரது தந்தை மற்றும் தாத்தாவை போலவே தலைமுறை தலைமுறையாக, 8 அடி ஆழமுள்ள சேற்றுக் குளத்தின் அடிப்பகுதியில் டைவ் செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.

“நான் தினமும் 7 முதல் 8 அடி ஆழமுள்ள குளத்தில் டைவ் செய்து, தண்ணீரில் மணிக்கணக்காக இருப்பேன். 8 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மூச்சு விடுவதற்காக தண்ணீரின் மேற்பரப்புக்கு வருவேன்” என்று ஷானி விளக்குகிறார்.

குளத்தின் இருண்ட ஆழத்தில் அவர் யூரியால் ஃபெராக்ஸ் (euryale ferox) எனப்படும் ஒருவகை தாமரை விதைகளை அறுவடை செய்து கொண்டிருப்பார்.

இவை மக்கானா, ஃபாக்ஸ் கொட்டைகள் (fox nuts) அல்லது தாமரை விதைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் அதிக அளவில் வைட்டமின் B, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்று ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் சிலர் இவற்றை ஒரு சூப்பர்ஃபுட் எனக் கூறுகின்றனர்.

By admin