• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம் – கட்சித் தலைவர்கள் கண்டனம் | Attack on media at MDMK meeting

Byadmin

Jul 11, 2025


விருதுநகர்: ​சாத்​தூரில் நடந்த மதி​முக கூட்​டத்​தில் காலி இருக்​கைகளை படம் பிடித்த ஊடகத்​தினரை “கேம​ராவை பிடுங்கி உடைத்​துப் போடுங்​கள்” என ஆவேசத்​துடன் வைகோ உத்​தர​விட்​டார். தொடர்ந்து ஊடகத்​தினரை கட்​சி​யினர் தாக்​கினர். விருதுநகர் மாவட்​டம் சாத்​தூரில் மதி​முக நெல்லை மண்டல செயல்​வீரர்​கள் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ உள்​ளிட்​டோர் பேசினர்.

கூட்​டத்​தில் துரை வைகோ எம்​.பி. பேசி முடித்​ததும், சென்னை செல்ல அவசர​மாகப் புறப்​பட்​டார். அவரைத் தொடர்ந்து கூட்​டத்​திலிருந்த பலரும் அரங்​கி​லிருந்து வெளி​யேறினர். தொடர்ந்​து, மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ பேசும்​போதும், அரங்​கி​லிருந்த ஏராள​மானோர் வெளி​யேறினர். இதனால் ஆவேசமடைந்த வைகோ “உள்ளே வந்து உட்​காருங்​கள், இல்​லை​யெனில் வீட்​டுக்​குப் போங்​கள்” என கடிந்​து​கொண்​டார்.

அப்​போது, அரங்​கில் காலி​யாக இருந்த இருக்​கைகளை ஊடகத்​தினர் சிலர் வீடியோ​வில் பதிவுசெய்​ததை கவனித்த வைகோ கோபமடைந்​து, “காலி சேரை காலிப் பயலுங்​க​தான் படமெடுப்​பாங்க, அவங்க கேம​ராவை பிடுங்கி உடைத்​துப் போடுங்​கள்” என கட்​சி​யினருக்கு உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, அங்​கிருந்த மதி​முக​வினர் சிலர் ஊடகத்​தினரை தாக்​கத் தொடங்​கினர். இதில், தனி​யார் தொலைக்​காட்சி ஒளிப்​ப​தி​வாளர் ஜெய​ராம், நிருபர்​கள் மணிவண்​ணன், கருப்​ப​சாமி ஆகியோர் காயமடைந்​தனர். பின்​னர் மூவரும் சாத்​தூர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக ஒளிப்​ப​தி​வாளர் ஜெய​ராம் விருதுநகர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டார். இதையடுத்​து, வைகோ உள்​ளிட்​டோர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி விருதுநகர் எஸ்​.பி. கண்​ணனிடம் நேற்று புகார் அளிக்​கப்​பட்​டது. இதற்​கிடையே, “சாத்​தூரில் நடந்த நிகழ்​வுக்கு தனிப்​பட்ட முறை​யிலும், கட்சி சார்​பிலும் பத்​திரி​கை, ஊடக நண்​பர்​களிடம் ஆழ்ந்த வருத்​தத்தை தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என்று துரை வைகோ தெரி​வித்​துள்​ளார்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “கூ​டாநட்பு கேடாய் முடி​யும் என்​பது​போல திமுக​வுடன் கூட்​ட​ணி​வைத்​து, தனது நிதானத்தை வைகோ இழந்​து​விட்​டாரோ எனத் தோன்​றுகிறது. அவர் மன்​னிப்பு கேட்க வேண்​டும். பத்​திரி​கை​யாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

பாஜக மாநில துணைத் தலை​வர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்ட அறிக்​கை​யில், “எந்த வாரிசு அரசி​யலை எதிர்த்து திமுக​விலிருந்து வைகோ வெளி​யேறி​னாரோ, அதே வாரிசு அரசி​யலைப் புகுத்​தி​ய​தால்​தான் இந்த தடு​மாற்​ற​மும், தோல்வி பயமும். பத்​திரி​கை​யாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய குண்​டர்​களை​யும், அவர்​களை ஏவி​விட்ட வைகோ மீதும் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டியது முதல்​வர் ஸ்டா​லினின் கடமை” என்று தெரி​வித்​துள்​ளார்.

மேலும், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக முன்​னாள்மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை, பாமக பொருளாளர் தில​க​பாமா உள்​ளிட்​டோரும் கண்டனம் தெரி​வித்​துள்​ளனர்.



By admin