• Sun. Jul 13th, 2025

24×7 Live News

Apdin News

மதுரையில் கடைகளை அகற்ற ரூ.30 லட்சம் லஞ்சம்: திமுகவினர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு | Nainar Nagendran accusations against DMK

Byadmin

Jul 13, 2025


மதுரை: மதுரை​யில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்​று​வதற்கு திமுக​வினர் ரூ.30 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

மதுரை மாநக​ராட்​சி​யில் வீடு​களுக்கு சொத்து வரி நிர்​ண​யிப்​ப​தில் நடந்த பல கோடி முறை​கேட்​டைக் கண்​டித்து பாஜக சார்​பில் கோ.புதூர் பேருந்து நிலை​யம் முன் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மாவட்​டத் தலை​வர் மாரி சக்​கர​வர்த்தி தலைமை வகித்​தார். மாநில பொதுச் செய​லா​ளர் ராம ஸ்ரீனி​வாசன் முன்​னிலை வகித்​தார்.

இதில் நயி​னார் நாகேந்​திரன் பேசி​ய​தாவது: 2026 தேர்​தலில் முரு​கன் சூரசம்​ஹாரம் செய்​வார். மதுரைக்​கும், திமுவுக்​கும் ராசி கிடை​யாது. ஆனால், மதுரை​யில் பாஜக​வின் எல்லா கூட்​டங்​களும் வெற்​றிகர​மாக அமைந்​துள்​ளன. 2026 தேர்​தலில் மீனாட்​சி​யின் ஆட்சி தமிழகத்​தில் மலரும். மதுரை மாநக​ராட்​சி​யில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்​துள்​ளது. தமிழக முதல்​வர் உத்​தர​வின்​பேரில், மண்​டலத் தலை​வர்​கள் ராஜி​னாமா செய்​துள்​ளனர். கே.கே. நகர் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்​று​வதற்​காக, வணிக வளாக உரிமை​யாளரிடம் திமுக​வினர் ரூ.30 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளனர். வீடு​களுக்கு சதுரஅடியை குறை​வாக கணக்​கிட்டு வரி முறை​கேடு செய்​துள்​ளனர்.

மேலும், கமிஷனர், துணை கமிஷனர் பயன்​படுத்​தும் சாப்ட்​வேரை இவர்​களே பயன்​படுத்​தி, ஊழல் செய்​துள்​ளனர். திமுகவைச் சேர்ந்த தொழில​திபரிடமே ரூ.7 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளனர். புதூர் வண்​டிப்​பாதை ரோட்​டில் 15 நாட்​களுக்கு முன்பு பத்​திரப்​ப​தி​வில் பெரிய ஊழல் செய்​துள்​ளனர். துணை மேயர் நடை​பாதையை ஆக்​கிரமித்து வீடு கட்​டி​யுள்​ளதை, இவர்​களால் அப்​புறப்​படுத்த முடிய​வில்​லை.

சிவகங்​கை​யிலும் திமுக​வினர் ஊழலில் ஈடு​பட்​டுள்​ளனர். மதுரை மாநக​ராட்​சி​யில் எங்​கும் ஊழல், எதி​லும் ஊழல் நடந்​துள்​ளது. மதுரை மண் கண்​ணகிக்கு நீதி கிடைத்த மண். தற்​போது நாங்​கள் நீதி கேட்​கிறோம். திமுக ஆட்சி அகற்​றப்பட வேண்​டும். எல்​லோரும் ஓரணி​யில் நின்​று, பொய்​களைக் கூறிக் கொண்​டிருக்​கும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.



By admin