• Thu. May 28th, 2026

24×7 Live News

Apdin News

மத்திய அரசின் சிபிஎஸ்இ அறிவிப்பை அண்ணாமலை எதிர்ப்பது ஏன்?

Byadmin

May 28, 2026


மும்மொழிக் கல்வியை கட்டாயமாக்கும் சிபிஎஸ்இ அறிவிப்பை அண்ணாமலை எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், K.Annamalai/X

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 1 முதல் மூன்று மொழிகளைத் தங்கள் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் படிக்க வேண்டும் எனவும் அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, “கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்குவது, தற்போதிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டில் இருந்துதான் அமல்படுத்தப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த வாரம் சிபிஎஸ்இ அனைத்து இணைப்புப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டில் இருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாக தமிழக மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், 2026-27 அல்லது 2029-30 என எந்த கல்வியாண்டாக இருந்தாலும், மாணவர்களுக்கு மும்மொழிப் பாடத் திட்டத்தைக் கொண்டு வருவதால் எவ்வித பயனும் விளைந்துவிடப் போவதில்லை என்றும் அது அவர்களுக்குக் கூடுதல் சுமையாகவே இருக்கும் என்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு விமர்சிக்கிறார்.

உண்மையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள சமீபத்திய சுற்றறிக்கையில் என்ன இருக்கிறது?

By admin