• Thu. Jul 17th, 2025

24×7 Live News

Apdin News

மந்திரம், பரிகாரம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகளில் இருந்து பெண்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?

Byadmin

Jul 16, 2025


மாந்திரீகம், பேய் ஓட்டுதல், ஆவி விரட்டுதல், சர்ச்சை, இன்றைய முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள்,

பட மூலாதாரம், Getty Images

தீய ஆவிகளை விரட்டுகிறோம் என்ற பெயரிலோ அல்லது சிறுமிகள் அல்லது பெண்களின் நோய்களை குணமாக்குகிறோம் எனும் பெயரிலோ, அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் சம்பவங்கள் குறித்து, இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்தும் பலவித கதைகளை கேட்டிருப்பீர்கள்.

இத்தகைய சம்பவங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தினாலும், இவை நமக்குப் புதிது அல்ல. இந்திய சமூகத்தில் இன்றும் மூடநம்பிக்கை எந்தளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதையும் எளிதில் ஆபத்துக்கு உள்ளாகக் கூடிய பெண்கள் மற்றும் சிறுமிகளை சுரண்டுவதற்கு இவை எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் இந்த சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன. அத்தகைய ஒரு சம்பவம் சென்னை வடபழனியில் நிகழ்ந்துள்ளது. ஆனால், இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மோசடி நபர்களிடம் மக்கள் ஏன் சிக்குகிறார்கள்?

தீய ஆவிகளை (Evil Spirit) அழிப்பதற்கு பரிகாரம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், கோவில் அர்ச்சகர் மீது வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு மாற்று வழிகளைத் தேடும் போது இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ‘தீய ஆவிகளை விரட்டுகிறோம்’ எனக் கூறும் நபர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

By admin