• Tue. Jul 8th, 2025

24×7 Live News

Apdin News

மனிதர்கள் கிசுகிசு பேசுவது ஏன்? பெண்கள் அதனை எதற்காக பயன்படுத்துகின்றனர்?

Byadmin

Jul 8, 2025


பணியிடத்தில் கிசுகிசுவை சித்தரிக்கும் படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிபிசி ரேடியோ 4
    • பதவி,

அது உங்கள் நற்பெயரைக் கெடுக்ககூடும். அது உங்கள் நடத்தையை நியாயப்படுத்தலாம். அது கேளிக்கை, பலருக்கு அது ஒரு “பாவம்”

கிசுகிசு பேசும் பழக்கத்தை மானுடவியலாளர்கள் நகர்ப்புறம், தொலைதூர கிராமப்புற மற்றும் தோட்ட சூழ்நிலைகள் என பெரும்பாலான கலாசாரங்களில் பார்த்திருக்கின்றனர்.

“அனைத்து கலாசாரங்களிலும், சரியான சூழ்நிலைகள் அமைந்தால் அனைவரும் கிசுகிசு பேசப்போகிறார்கள்,” என்கிறார் வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பரிணாம மானுடவியல் இணை பேராசிரியராக இருக்கும் நிகோல் ஹேகன் ஹெஸ்.

கிசுகிசு என நினைக்கும்போது, ஒருவருக்கு பின்னால் தீய நோக்கத்தோடு புறம்பேசுவதை நாம் கற்பனை செய்து பார்க்கக்கூடும். ஆனால் ஹெஸ் ஒரு பரந்த பார்வையை தருகிறார்.

By admin