• Fri. Jun 5th, 2026

24×7 Live News

Apdin News

மமதா பானர்ஜியால் நீக்கப்பட்டவர் திடீரென மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

Byadmin

Jun 5, 2026


திரிணாமுல் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட ரிதப்ரத பானர்ஜி

பட மூலாதாரம், ANI

இரண்டு நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ ரிதப்ரத பானர்ஜி, மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் அளிக்கப்பட்ட ஆதரவுக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் ரதீந்திர பாசு, எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் அறையின் சாவியை ரிதப்ரதவிடம் ஒப்படைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரிதப்ரத, “திரிணாமுல் காங்கிரஸ் சின்னத்தில் வெற்றி பெற்ற மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்கு 60 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தற்போது மாநிலத்திற்கு வெளியே இருக்கிறார்கள். நாங்கள் அவையில் பாஜகவை வலுவாக எதிர்கொள்வோம்,” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவின் ஆலோசகராக இருக்க வேண்டும் என்று ரிதப்ரத கோரிக்கை விடுத்துள்ளார். அபிஷேக் பானர்ஜியுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக 58 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையில் கூட்டம் நடத்தி, சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒரு கடிதத்தை ஒப்படைத்தனர். அந்தக் கடிதத்தில் ரிதப்ரத சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

By admin