• Sun. May 31st, 2026

24×7 Live News

Apdin News

மரத்தில் கார் மோதி விபத்து – சென்னை மருத்துவ மாணவி பலி

Byadmin

May 31, 2026


சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் (வயது 47).

இவர் தனது மனைவி சங்கீதா, மகன் சத்யராஜ், மகள் ஹரிணி (20), உறவினர்கள் பிரேமா, லிபியா ஜாய்சி ஆகியோருடன் காரில் வேளாங்கண்ணி நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை சத்யராஜ் ஓட்டி வந்தார்.

மரத்தில் கார் மோதியது

அப்போது கார் மயிலாடு துறை அருகே, தரங்கம்பாடி தாலுகா செம்பனார் கோவில்-திருவிளையாட்டம் பிரதான சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிமரத்தில் மோதியது.

இதில் காரில் வந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காரில் இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவ மாணவி பலி

அப்போது செல்லும் வழியிலேயே ஹரிணி உயிரிழந்தார். இவர் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

By admin