• Thu. Jul 17th, 2025

24×7 Live News

Apdin News

மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டாஸ்: அமலுக்கு வந்தது சட்டம் | Law comes into effect for dumping medical waste is crime

Byadmin

Jul 17, 2025


சென்னை: பொது இடங்​கள், நீர்​நிலைகளில் மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டி​னால் குண்​டர் சட்​டத்​தின்​கீழ் நடவடிக்கை எடுக்​கும் சட்​டம் அமலுக்கு வந்​தது. கடந்த மார்ச் மற்​றும் ஏப்​ரல் மாதங்​களில், சட்​டப்​பேர​வை​யின் பட்​ஜெட் கூட்​டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி ஒப்​புதல் அளித்​தார்.

இதன்ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் 5 மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளித்​தார். அதில், உயிரி மருத்​து​வக் கழி​வு​களை குவித்​தல், அண்டை மாநிலங்​களில் இருந்து கொண்​டு​வந்து கழி​வு​களை கொட்​டு​வோர், குவித்து வைப்​போர் மீது குண்​டர் சட்​டத்​தில் நடவடிக்கை எடுக்க வழி​வகை செய்​யும்​மசோதாவும் ஒன்று.

இதற்கு ஆளுநர் ஒப்​புதல் அளித்து சட்​டம் அமலுக்கு வந்த நிலை​யில் இந்த சட்​டத்​திருத்​தம் ஜூலை 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ள​தாக தமிழக அரசிதழில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin