• Fri. Oct 2nd, 2026

24×7 Live News

Apdin News

‘மற்றவர்களை சாக விடமாட்டேன்’: இந்திய விமானி ஸ்மித் மச்சார், மோதியுடன் பேசியது என்ன?

Byadmin

Oct 2, 2026


ஃப்ளைதுபை விமானி ஸ்மித் மச்சார் இந்தியப் பிரதமருடன் உரையாடினார்.

படக்குறிப்பு, ஃப்ளைதுபை விமானி ஸ்மித் மச்சார் இந்தியப் பிரதமருடன் உரையாடினார்.

துபையிலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை விமானத்தில், சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட போதிலும், சக பயணிகள் உள்ளே வருவதற்காகக் காக்பிட் கதவைத் திறந்த இந்திய விமானி, “மற்றவர்களைச் சாக விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த விமானம் ஆபத்தான முறையில் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்ததைக் கவனித்தபோது, தான் தரையில் காயங்களுடன் கிடந்தாலும் எப்படியாவது ஒரு இறுதி முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்ததாகக் கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machhar) கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் காணொளி வாயிலாகப் பேசிய அவர், “நான் காயமடைந்து தரையில் கிடந்தாலும், கதவை உள்ளிருந்து திறக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு ஒரு இறுதி முயற்சி செய்தேன்” என்றார்.

“மற்றவர்களும் உள்ளே வந்து (சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதில்) உதவினர். நான் நிச்சயமாக எனது சொந்த உயிருக்காகத்தான் போராடிக்கொண்டிருந்தேன், அதே நேரத்தில் மற்றவர்களை சாக விடமாட்டேன் என்பதிலும் தெளிவாக இருந்தேன்” என்று அவர் மேலும் கூறினார்.

புதன்கிழமை அதிகாலை துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபை விமானம், தனது பயணத்தின் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு 17,000 அடிக்கும் அதிகமான உயரத்திலிருந்து (5,200 மீட்டர்) திடீரெனக் கீழ்நோக்கிப் பாய்ந்தது.

By admin