• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

மாணவர்களின் குரல் அல்ல, பொய்களின் சூழ்ச்சி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி

Byadmin

Sep 8, 2026


பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததுடன், அடிக்கல் நாட்டினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி மூலம் உங்களை திசை திருப்ப முயற்சிக்கும் மனிதர்களைக் காண்பீர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள்.

நாட்டின் இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் நிபுணர்களாக மாற வேண்டும். அவர்கள் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின்சாரம் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுவதில் அரசாங்கம் எவ்வளவு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பதை இளைஞர்களால் காண முடிகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ராகுல் காந்தியின் மாணவர்கள் குரல் பிரசாரம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மாணவர்களின் குரல் (Chhatron Ki Goonj) என்ற பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். வினாத்தாள் கசிவு, மாநில வேலைவாய்ப்பு தேர்வில் உள்ள முறைகேடு தொடர்பாக முக்கிய நகரங்களில் உள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.

இந்த நிலையில்தான் பிரதமர் மோடி இவ்வாறு கிண்டல் செய்துள்ளார். அதேவேளையில் ராகுல் காந்தியின் முன்னெடுப்பை கண்டு பாஜக அஞ்சுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

By admin