• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

‘மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு’ – பிபிசி தமிழ் கள ஆய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்

Byadmin

Aug 22, 2026


'மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு' - பிபிசி தமிழ் கள ஆய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

“சில மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளது. அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அது குறைந்த அளவிலேயே உள்ளது. இருப்பினும் அதன் புழக்கத்தைத் தடுக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

சென்னை புறநகரில் பள்ளி வளாகத்தில் தென்பட்ட போதைப் பொருளை பிபிசி தமிழ் காட்டியபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த விளக்கம் இது.

மாணவர்களின் நடை, உடை, சிகை ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் கற்றலில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டு வருவதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் (Anti-Drug Clubs) மூலம் பயன்பாட்டைத் தடுப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக, தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது.

இந்த நிலையில், உண்மையில் ‘பள்ளிகளில் என்ன நடக்கிறது?’ என்பதை அறிய களத்திற்குச் சென்றது பிபிசி தமிழ்.

By admin