• Sun. Apr 19th, 2026

24×7 Live News

Apdin News

மான்ட்கோமெரி: எல் அலமெய்ன் போரில் ரோமெலை இவர் வென்றது எப்படி? 2ம் உலகப்போர் வரலாறு

Byadmin

Apr 19, 2026


எல் அலமெய்ன் யுத்தம், மான்ட்கோமெரி - ரோமெல், ஹிட்லர், நாஜி ஜெர்மனி, பிரிட்டன், சர்ச்சில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1942 நவம்பரில் நடந்த இரண்டாவது எல் அலமெய்ன் யுத்தத்தின் புகழ்பெற்ற வெற்றிக்கு மூளையாகச் செயல்பட்ட ஃபீல்ட் மார்ஷல் பெர்னார்ட் மான்ட்கோமெரி

ஃபீல்ட் மார்ஷல் பெர்னார்ட் “மான்டி” மான்ட்கோமெரி 50 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

கடந்த 1968ஆம் ஆண்டில், பிபிசியிடம் அவர் எல் அலமெய்ன் யுத்தம் மற்றும் அவரது ஜெர்மன் எதிரியான “பாலைவன நரி” என்று அழைக்கப்பட்ட எர்வின் ரோமெல் பற்றிப் பேசினார்.

“தோல்வியின் போது வீழ்த்த முடியாதவர். வெற்றியின் போது தாங்க முடியாதவர்” என வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய இந்த ஒரு கருத்து, 1942 நவம்பரில் நடந்த இரண்டாவது எல் அலமெய்ன் யுத்தத்தின் புகழ்பெற்ற வெற்றிக்கு மூளையாகச் செயல்பட்ட ஃபீல்ட் மார்ஷல் பெர்னார்ட் மான்ட்கோமெரியின் திறமையை வெளிப்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரின் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும் வட ஆப்பிரிக்காவில் நடந்த இந்த யுத்தம், சர்ச்சிலின் மற்றொரு புகழ்பெற்ற மேற்கோளைக் கூற காரணமாக அமைந்தது.

“இப்போது, இது முடிவல்ல. இது முடிவின் தொடக்கம்கூட அல்ல. ஆனால், ஒருவேளை இது தொடக்கத்தின் முடிவாக இருக்கலாம்” என்பதுதான் அந்தக் கூற்று.

By admin